fbpx

குழந்தை திருமணம் 15 வயது சிறுமிக்கு ஏற்படயிருந்த விபரீதத்தை தடுத்து…..! குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினர்…..!

மேடவாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு 15 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். 10ம் வகுப்பு முடித்துவிட்டு அவர் வீட்டில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் தான் குமாரும் ,லட்சுமியும் தங்களுடைய நகலை சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் சம்பவம் குறித்து செங்கல்பட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேற்று முன்தினமே தகவல் கிடைத்திருக்கிறது.

ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியை பத்திரமாக மீட்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உண்மைதான் என்று தெரிய வந்தால் செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். அதோடு இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களிடம் குழந்தைகள் நல அலுவலர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

சாலை ஓரத்தில் பேசிக் கொண்டிருந்த இருவர் திடீரென்று கத்தியை எடுத்த நபர்…..! மறு நிமிடம் ரத்த வெள்ளத்தில் சரிந்த கட்டிட தொழிலாளி…..!

Wed Jun 28 , 2023
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கொளஞ்சி (45) இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதை மேம்பாலத்தின் கீழ் தென்காசியில் சேர்ந்த அவிநாசி (22 )என்ற நபரும் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கொளஞ்சியும், அவிநாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்பு சாலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் […]

You May Like