”நீட் ரொம்ப கஷ்டமா இருக்குமா”..! தாய்க்கு கடிதம் எழுதிவைத்து விட்டு மாணவன் தற்கொலை..!

”எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார்
தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முரளி கிருஷ்ணா (18) ஓசூரில் உள்ள தனியார் பள்ளி படித்து வந்தார். கடந்த ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்தார். அதனைத்தொடர்ந்து அவர் நீட் எக்ஸாம் போட்டித் தேர்வுக்காக தேர்வும் எழுதியுள்ளார். ஆனால், 160 மதிப்பெண்கள் எடுத்து அவர் நீட் தேர்வில்
தோல்வி அடைந்தார். இதையடுத்து, முரளி கிருஷ்ணா இந்த ஆண்டும் நீட் போட்டித் தேர்வை எழுதுவதற்காக வீட்டிலிருந்தே படித்து வந்துள்ளார்.

நீட் தேர்வு: தர்மபுரி, நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை! - தமிழகத்தை  உலுக்கும் மரணங்கள் |two students suicide in fear of NEET exam

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த முரளி கிருஷ்ணா, தனது அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதைக் கண்ட அவரது பெற்றோர் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால், அவர் எந்த சப்தமும் கொடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அறையினுள் முரளி கிருஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாருக்கு மாணவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில், “எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்குமா என்னால நீட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியல, என்ன மன்னிச்சிருமா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணினேன். ஆனா மெடிக்கல் சீட் வாங்கற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது. நான் இந்த முடிவை எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடுமா. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேம்மா” என அவர் தனது தாய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

Chella

Next Post

சொத்து பிரச்சனை... பிரபல தமிழ் நடிகர் மீது சகோதரிகள் வழக்கு..

Thu Jul 7 , 2022
நடிகர் சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமாருக்கு எதிராக அவர்களின் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மொத்தம் பிரபு, ராம்குமார், சாந்தி, ராஜ்வி என்ற 4 பிள்ளைகள் உள்ளனர்.. இவர்களில் நடிகர் பிரபு ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக இருந்து, தற்போதும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.. அவரின் சகோதரர் ராம்குமார் ஐ உள்ளிட்ட ஒரு சில படங்களில் […]

You May Like