fbpx

ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்…! தெற்கு ரயில்வே அறிவிப்பு…!

எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளான ஜூலை 9, 16, 23, 30, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பி‌.எம் கிசான்...! விவசாயிகளுக்கு 14 வது தொகை..! e kyc அப்டேட் செய்வது கட்டாயம்...! முழு விவரம்...

Thu Jun 29 , 2023
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின்‌ விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம்‌ ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில்‌ தவணைக்கு ரூ. 2000/- வீதம்‌ ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. PM KISSAN திட்டத்தில்‌ காஞ்சிபுரம்‌ […]

You May Like