fbpx

இந்தியன் 2..!! பொத்தி பொத்தி வச்சிருந்த தேதி..!! பொசுக்குனு போட்டுடைத்த உதயநிதி..!!

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படம் அந்த கால கட்டத்திலேயே பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் அதே கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.

இதையடுத்து 2020இல் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இதனால் இந்தியன் 2 திரைப்படம் கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டது.

பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை கையில் எடுத்து தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவித்து பூஜையுடன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அதிலிருந்து ஜெட் வேகத்தில் நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதாம். படத்தில் சில காட்சிகள் பார்த்த கமலும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.

இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அப்படத்தின் ஒரிஜினல் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதியிடம் இந்தியன் 2 படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அப்படம் சூப்பராக வந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 25 நாட்கள் எஞ்சி உள்ளதாகவும், அதன்பின் கிராபிக்ஸ் பணிகள் படத்தில் நிறைய இருப்பதால், படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார். அதோடு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தையும் ஒருபக்கம் நடந்து வருவதாக உதயநிதி தெரிவித்தார். அவர் சொல்வதைப் பார்த்தால் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு இந்தியன் 2 படம் ரிலீஸாகும் போல தெரிகிறது.

Chella

Next Post

ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

Thu Jun 29 , 2023
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரனுமான ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 85* ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். முதல் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் மோதிவருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் […]

You May Like