விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்க பதிவு செய்த காவல்துறையினர் மணிமாறனை கைது செய்துள்ளனர்.