நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார்.
குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இதேபோல் நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார். அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.