தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.
2வது மகனான சுகம் கோவையில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், பாலமுருகன் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் நேற்று இரவும் மது குடித்துவிட்டு வந்து வழக்கம் போல மனைவி மற்றும் மகன் சூர்யாவிடமும், வெளியூரில் இருந்து வந்திருந்த மகன் சுகனிடமும் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட தாய் மற்றும் 2 மகன்களும் சேர்ந்து கயிற்றால் பாலமுருகனின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக நாடகமாடினர். இதனைத் தொடர்ந்து, சித்தார் கட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனின் சாவில் மர்மம் இருப்பதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்த புகாரின் அடிப்படையில், மூவரையும் அழைத்து வந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தையை மனைவி மற்றும் இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்து நாடகம் ஆடினர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து. அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தலைவரை குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.