தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது.
தன்னாட்சியை பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில், முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில் 60 சதவீத மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின் h-index குறியீடு 10-ல் இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய 3 ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டு தேர்ச்சி சதவீதம் 70 சதவீதத்திற்கும் மேலாக இருக்க வேண்டும். விரிவுரையாளர்களின் சராசரிபணி அனுபவம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளிலும் ஆசிரியர் – மாணவர்கள் விகித அளவு என்பது 1:20 ஆக இருக்க வேண்டும். 75 சதவீத இளங்கலை படிப்புகளில் ஒரு பேராசிரியர், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 துணை பேராசிரியர்கள் என இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தன்னாட்சி கல்லூரிகளிலும் நிர்வாக குழு, நிதி குழு,அகடமிக் குழு அமைக்கப்பட்டு முறையாககூட்டப்பட வேண்டும். புதிய துறைகள் தொடங்கப்பட வேண்டும் என்றால் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற. வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.