fbpx

Threads – தோல்வியை மறைக்க மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த ஆயுதமா??

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனம் பல மாதங்களாக டிவிட்டருக்கு போட்டியாக ஒரு தளத்தை உருவாக்கி வருகிறது என்ற பேச்சு இருந்தது. பல்வேறு கணிப்புகளுக்கும், கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்டா வியாழக்கிழமை உலகளவில் Threads என்ற புதிய சேவை மற்றும் ஆப்-ஐ அறிமுகம் செய்தது.

Threads – இது இன்ஸ்டாகிராம்-ன் இணை சேவையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பேஸ்புக்-ஐ தேர்வு செய்யாமல் இன்ஸ்டாகிராம்-ஐ சேர்வு செய்ய மிக முக்கியமான காரணம், இன்ஸ்டாவில் தான் GenZ வாடிக்கையாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் தான் சமுகவலைத்தளத்தின் எதிர்காலம் என்பதால் இவர்களை டார்கெட் செய்து Threads அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Threads வியாழக்கிழமை இரவு முதல் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, இந்த செயலியில் டிவிட்டரில் இருப்பது போலவே 500 சொற்கள் கொண்ட TEXT பதிவு, போட்டோ, 5நிமிட வீடியோ ஆகியவற்றை அப்லோடு செய்யலாம். இது மட்டும் அல்லாமல் டிவிட்டரை போலவே மினிமல் டிசைன், யூசர் இன்டர்பேஸ் ஆகியவை கொண்டு உள்ளது.

எலான் மஸ்க் டிவிட்டர்-ஐ வாங்கிய பின்பு அதன் வாடிக்கையாளர், முக்கியத்துவம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதேவேளையில் பேஸ்புக் பயன்பாட்டு வீழ்ச்சி, டிக்டாக் ஆதிக்கம், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் சரிவு, வாட்ஸ்அப் பே தோல்வி, அனைத்திற்கும் மேலாக மெட்டா-வில் முதலீடு செய்யப்பட்ட 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு எவ்விதமான பலனும் இல்லாமல், மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த தோல்விகளை மறைத்து மெட்டா தனது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு வருடமாக டிவிட்டரை காப்பி அடிக்காமல் இருந்த மார்க் ஜூக்கர்பெர்க் தனது பல தோல்விகளை மறைக்க டிவிட்டருக்கு போட்டியாக Threads செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

பேஸ்புக் தனக்கு போட்டியாக இருந்த ஸ்னாப்சேட்-ஐ காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் Poke என்ற தளத்தை ஸ்னாப்சேட் டிசைன் வடிவிலேயே உருவாக்கியது. ஆனால் இதை குறுகிய காலத்திலேயே மூடப்பட்டது. மார்க் ஜூக்கர்பெர்க் இன்று வெற்றிப்பெற்றவராக இருந்தாலும், பேஸ்புக் என்பது winklevoss சகோதரர்களின் ஐடியா, போட்டோ ஷேரிங் தளத்தை உருவாக்கி தோல்வி அடைந்த காரணத்தால் 2012ல் இன்ஸ்டாகிராம்-ஐ 1 பில்லியன் டாலர் தொகைக்கு கெவின் மற்றும் மைக்-யிடம் இருந்து வாங்கப்பட்டது. வாட்ஸ்அப் தளத்தை ஜேன் கோம் மற்றும் ப்ரையன் அகடன் ஆகியோரிடம் இருந்து வாங்கப்பட்டது.

Maha

Next Post

ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றது செல்லாது..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Thu Jul 6 , 2023
தேனி எம்.பி. ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் […]

You May Like