விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் தான் senior super singer-9 நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிறியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாக இருக்கிறது.
இந்நிலையில், இதுதொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் உலகநாயகனும், நமது பிக்பாஸ் ஆண்டவருமான நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்கூறி அந்த சிறுவர்களை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கிறார். மேலும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.