ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. தமன்னா தாறுமாறாக ஆடிய இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது.
இந்நிலையில், எப்போதும் போல் இப்பாடல் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அந்த வரிசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடல், எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றிலிருந்து காப்பியடிக்க பட்டுள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றானர். அத்துடன் வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர்.