28 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் கார் களமிறங்கியது..!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் எக்ஸ்டர் , இன்று (ஜூலை 10) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளது.


மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் கார், 6 மோனோடோன் மற்றும் 3 ட்யூயல் டோன் என மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ‘H’ வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், ‘H’ வடிவ எல்இடி டெயில்லேம்ப்கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டார்கள், ரூஃப் ரெயில் மற்றும் ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இந்த காரின் முக்கியமான டிசைன் அம்சங்களாக உள்ளன. அதே நேரத்தில் 3 வருடங்கள்/அன்லிமிடெட் கிலோ மீட்டர்கள் வாரண்டி (Warranty) உடன் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். இது E20 எரிபொருளில் இயங்க கூடியது. E20 என்பது 20 சதவீதம் எத்தனால் (Ethanol) மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவையாகும். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 1.2 லிட்டர் Bi-fuel கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜினும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 1.2 லிட்டர் Bi-fuel கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் 69 பிஎஸ் மற்றும் 96 என்எம் ஆக உள்ளது. பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும், இந்த இன்ஜின் அதிகப்படியான மைலேஜை வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை முதல் டாப் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் ஹூண்டாய் எக்ஸ்டர் பெற்றுள்ளது.

டிரைவர் அதிவேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதியும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் இடம்பெற்றுள்ளது. இதர வசதிகளை (Features) பொறுத்தவரையில், குரல் கட்டளை மூலம் இயக்க கூடிய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மிக முக்கியமானதாக உள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5,99,900 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே கூறியதை போலவே, சுமார் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

RUPA

Next Post

தமிழ்நாட்டில் இனி அரசு பஸ் எல்லாம் கரெக்ட் டைம்க்கு வரும்..!

Mon Jul 10 , 2023
தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது. தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகிறது. சிறு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு […]
UPSRTC bus

You May Like