1987 ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) 37-வது உலக மக்கள்தொகை தினமாகும். நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு, 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இன்று உலக மக்கள் தொகை 800 கோடி என்ற அளவைத் தொட்டு விட்டது. உருவாக்கியது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011ல் 700 கோடி ஆனது. தற்போது 800 கோடி. அதாவது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது என்றும் தற்போது உலக மக்கள் தொகை 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது என்றும் ஐநா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ல் 850 கோடி, 2050ல் 970, 2100ல் 1090 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 கோடி பேர் பிறக்கின்றனர். 5.70 கோடி பேர் இறக்கின்றனர். ஆனால் இப்போது கருத்தரிக்கும் விகிதம் சற்றுக் குறைவாக இருப்பதால் மக்கள் தொகைப் பெருக்கமும் குறைவாக உள்ளது. 1992-ம் ஆண்டு உலகில் உள்ள 20000 விஞ்ஞானிகள் உலக மக்களுக்கு உலக விஞ்ஞானிகளின் எச்சரிக்கை என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
அடுத்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னும் இரு நூறு கோடிப் பேர் கூடிய நிலையில் இன்னொரு அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். “இப்படிப்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம் மனித குலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும். சுற்றுப்புறச் சூழல் பெரிதும் கெடும். நாம் நமது இனப்பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்” என்று அவர்கள் இந்த இரண்டாவது அறிவிப்பில் சுட்டிக் காட்டினர்.
இருப்பினும், வளர்ந்த நாடான சீனாவிற்கும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்கும் மக்கள் தொகை பெருக்கம் மிகுந்த சவாலாக உள்ளது. சீனாவில் சுமார் 142.5 கோடி மக்கள் இருக்கும் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகையோ சுமார் 34 கோடி தான். சில நாடுகளில் மக்கள் தொகையை குறைப்பதற்கும் சில நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கவும் அரசாங்கங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதுவரை இந்தியாவில் 16 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடைசியாக பதினாறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டது இதன் ஆணையராக செயல்பட்டவர் திரு விவேக் ஜோசி அவர்கள். இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருப்பதால் அது நமது பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இதனால் வறுமை ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது.
பருவநிலை மாறுதல்: புவி வெப்பம் கூடிக் கொண்டே போவதால் வெப்ப அலையினால் நோய்கள் பரவும். கிருமிகளை வெப்பம் வேகமாகப் பரவச் செய்யும் போது ஜிகா, டெங்கு, மலேரியா, நிபா போன்ற கொடிய வியாதிகள் வெகு விரைவில் பரவும். மனித குலத்திற்குப் பேரிழப்பு ஏற்படும். வெள்ள அபாயம், அசுத்த நீர் கேடு உள்ளிட்டவை ஏற்படும்.பல்லியிர் இணக்கத்தின் இழப்பு, காடுகளையும் தாவரங்களையும் அழிப்பதால் இவையெல்லாம் அழிந்து கொண்டே வருகின்றன.. இப்படி பல்லுயிர் இணக்கத்தின் இழப்பானது மனித குலமே அழிய வழி வகுக்கும்.
கடல் நீர் அமிலமயமாதல்:கடல் நீரில் அமிலங்கள் கலப்பதால் மீன்கள், சிப்பிகள், திமிங்கலங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பல நாடுகளின் பொருளாதார வளமே இதனால் சிதைகிறது. ஓசோனில் ஓட்டை:நகரங்களிலிருந்து எழும் நச்சுப் புகைகள் இந்த ஒசோன் உறை மீது பட்டுப்பட்டு அதில் இப்போது துளை விழ ஆரம்பித்து விட்டது. குளோரோப்ளோரா கார்பன் எனப்படும் நச்சு மாசுப் பொருள் ஓசோன் உறையிலிருந்து பெருமளவு ஆக்சிஜனை எடுக்கிறது. இதன் விளைவாக கண் நோய்கள், தோல் வியாதிகள் பெருமளவு ஏற்படுகிறது.
வளி மண்டலத்தில் தூசிப்படலம்: வாகனங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகையும் பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் துகள்மப் பொருள்களுமே தான். துகள்மப் பொருள்கள் குறுமணலை விட அளவில் சிறியவை. இவை காற்றில் கலக்கும் போது அவற்றை சுவாசிப்பவருக்கு ஆஸ்த்மா உள்ளிட்ட ஏராளமான வியாதிகளைத் தருகின்றன. இந்த நீர் வளம் அசுத்தமாக ஆகிக் கொண்டே போவதோடு குறைந்து கொண்டே போகிறது. சுத்த நீர் இன்மையால் குடிநீர்த் தட்டுப்பாடு உலகெங்கும் இப்போது ஏற்பட்டு வருகிறது. ஆங்காங்கே தொழிற்சாலைகளின் கழிவு நீர்கள் அமிலத் தன்மையுடன் ஆறுகளிலும் குளங்களிலும் கடலிலும் கலக்கப்படுகிறது.
நைட்ரஜன், பாஸ்பரஸ் பயன்பாடு, நிலப் பயன்பாடு மாறுதல்: நில வளங்களைச் சுரண்டுவது ஆங்காங்கே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வாதார இடமாக அமைவது காடுகளே. ஆக இப்படி நிலத்தைச் சுரண்டாமல், காடுகளை அழிக்காமல் வாழாவிடில் அது மனிதகுலம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு அபாயமாகும்.
நவீன ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கும் கெமிக்கல்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை. இதைத் தவிர்க்க முதலில் அளவான குடும்பமே வளமான வாழ்வைத் தரும் என்ற எண்ணம் உலகில் வாழும் ஒவ்வொருவரின் மனதிலும் வேரூன்ற வேண்டும். இதற்கு விழிப்புணர்ச்சி தேவை.பெண்களின் கல்வி அறிவை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்தி முழுமையாக்க வேண்டும்.இதற்கான விழிப்புணர்வு நாளே உலக மக்கள் தொகை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.