fbpx

கேள்வி கேட்டவரை அடித்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்..! இது போதாது- சவுக்கு சங்கர்…

கடந்த சில தினங்களுக்கு முன் கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே கேள்வி கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது, பிறகு அங்கு வந்த காவலர்களில் ஒருவர், மது பாட்டில்களுடன் இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளார், அங்கிருந்த மற்றொரு காவலருடன் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அதிர்ந்த அவர், வாகனத்தை எடுத்து சென்ற காவலருக்கு போன் செய்து பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பதாக கூறினார், அதன் பிறகு அங்கு வந்த காவலர், எடுத்து சென்ற இருச்சக்கர வாகனத்தையும் மது பாட்டில்களையும் இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், பொதுமக்களிடம் மட்டும் அதிகாரத்தை காட்டுவார்கள், இதோ இந்த மதுபானக்கடையில் பத்து ரூபாய் அதிகம் விற்கிறார்கள் அதை எல்லாம் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று மன வேதனையை வெளிப்படுத்தி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜா, தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி அவரை திட்டியது மட்டும் இல்லாமல், அதிகாரத்தை மீறி, ஒரு ரவுடியை போல் அவரை கண்டபடி அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தார்.

இந்நிலையில் அத்துமீறிய காவல் உதவியாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றாப்பட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், “இந்த காவல் உதவியாளர் ராஜாவுக்கு இந்த ஆயுத படைக்கு மாற்றிய தண்டனை போதாது எனவும், முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இப்படி செய்வதால் டிஜிபி சங்கர் ஜிவால் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Kathir

Next Post

சில்க் ஸ்மிதாவை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பிரபலம்..!! வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Thu Jul 13 , 2023
80-களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் திடீரென இறந்தது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. இவர் உச்ச நடிகையாக இருந்த போது  ராதாகிருஷ்ணன் என்ற மருத்துவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் நட்பாக இருந்த பலரும் கூறுவார்கள். அதே நேரத்தில் பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்த வேலு பிரபாகரனிடம் சில்க் நெருக்கமாக பழகியுள்ளார். இதுகுறித்து வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் கூறுகையில் “நானும், […]

You May Like