40 வயதிலும் அவர்கள் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. அவ்வாறான ஒரு சில அத்தியாவசிய சப்ளிமெண்ட்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம் வயதிற்கு ஏற்ற உணவை சாப்பிட்டு வந்தால் மட்டுமே, நமது உடல் ஆரோக்கியத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு செய்ய தவறும் பொழுது தான் ஏராளமான நோய்களுக்கு ஆளாகிறோம். குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் பொழுது அவர்கள் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெறுகிறது. 40 வயதை அடைந்த பெண்கள் இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிக்கிறார்கள். வயது காரணமாக அவர்களது ஆற்றல் அளவும் குறைகிறது. இதனால் அடிக்கடி முதுகு வலி, மூட்டு வலி அல்லது எலும்பு வலி போன்றவற்றிற்கு ஆளாகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் அவர்களது உணவில் அத்தியாவசியமான ஒரு சில சப்ளிமெண்ட்களை சேர்ப்பது உதவக்கூடும்.
வைட்டமின் B12 சப்ளிமெண்ட்கள் சாப்பிடுவது உடல் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதைத் தவிர இது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. முட்டை, மீன் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு வைட்டமின் B12 காணப்படுகிறது. பொதுவாக 40 வயதை அடைந்து விட்டாலே, பெண்களின் எலும்புகள் கால்சியம் குறைபாடு காரணமாக வலிமை இழக்கச் செய்யும். ஆகவே பால் மற்றும் சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த சப்ளிமெண்ட்களை உணவுகளில் சேர்ப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்பெறச் செய்யும். மெக்னீசியம் நிறைந்த உணவுகளை நாம் தினமும் சாப்பிடும் பொழுது நமது உடலில் இருக்கக்கூடிய ரத்த சர்க்கரையளவு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கவும், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உதவும். 40 வயதைக் கடந்த பெண்கள் முழு தானியங்கள், பருப்பு வகைகள், கீரைகள், நட்ஸ் மற்றும் அவகாடோ போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் D குறைபாடு நீரழிவு நோய், மார்பக புற்று நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
40 வயதை அடைந்த பெண்கள் தங்களது உணவுகளில் மீன், பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள், பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதால் வைட்டமின் D குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.40 வயதை கடந்து விட்டாலே இதய நோய்கள், மூட்டு வலி, அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. இது போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு வஞ்சரம், கானாங்கெளுத்தி, நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் போன்ற ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.