fbpx

மழைக்காலங்களில் உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை எப்படி பாதுகாப்பது..? சூப்பரான டிப்ஸ் இதோ..!!

பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அனல் தெறிக்கும் வெப்பத்தில் இருந்து ஒருவகையில் நமக்கு நிவாரணம் கிடைத்தாலும், இந்த மழைக்காலங்களில் புதிய சவால்கள் தேடி வருகின்றன. பல யோசனைகளுக்கு பிறகு ஆசையாக எலெக்ட்ரிக் பைக் வாங்கியிருப்பீர்கள். இந்தக் காலத்தில் உங்களது எலெக்ட்ரிக் பைக்கை மழையில் நனையாதவாறு பாதுகாக்க சில டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாட்டர் புரூஃப் கவர்கள் :

உங்கள் எலெக்ட்ரிக் பைக்கின் வடிவமைப்பிற்கு ஏற்ற வாட்டர் புரூஃப் கவர்களாக பார்த்து வாங்குங்கள். இந்த கவர்களை பயன்படுத்தி உங்கள் எலெக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டரை மூடிவிட்டால் மழையிலிருந்தும், தூசுகளிலிருந்தும் காத்துக் கொள்ளும். உங்கள் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார்களில் நீர் புகாதவாறும் இவை தற்காத்துக் கொள்ளும்.

வாகனத்தை சுத்தமாக வைத்திருங்கள் :

பருவமழை காலங்களில் நமது எலெக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டரை சுத்தமாகவும் ,ஈரம் இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். இந்தக் காலங்களில் சேறு, சகதி, அழுக்குகள், நீர் போன்றவை வாகனங்களின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகிவிடும். இதனால் உங்கள் பைக்கிற்கு தான் பாதிப்பு. மழையில் பைக்கை ஓட்டிக் கொண்டு வந்தால், வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக மென்மையான துணி அல்லது பஞ்சை பயன்படுத்தி பைக்கை நன்றாக துடைத்து விடுங்கள். பிரேக், வயர்கள், சஸ்பென்சன் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதை அடிக்கடி செய்தால் உங்கள் பைக்கில் துரு பிடிக்காமல் இருப்பதோடு நல்ல திறனோடு இருக்கும்.

பேட்டரி பராமரிப்பு :

உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரியின் செயல்பாட்டையும் ஆயுளையும் ஈரப்பதம் குறைத்துவிடும். ஆகையால், பேட்டரியில் எங்காவது நீர் தேங்கியுள்ளதா என அடிக்கடி பரிசோதித்து கொள்ளுங்கள். பைக் உற்பத்தியாளர்கள் கூறியபடி பருவமழை காலங்களில் பேட்டரியை பராமரியுங்கள்.

வாகனத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் பூச்சுகளை உபயோகியுங்கள் :

மெழுகு அல்லது சிலிக்கான் ஸ்ப்ரே ஆகியவற்றை உங்கள் வாகனங்களில் பூசினால், உங்களது பைக் பாதுகாப்பாக இருப்பதோடு ஈரம் ஆகாமல் இருக்கும். இதனால், பைக்கின் பெயிண்ட் அப்படியே இருக்கும். நீர் உள்ளே புகாது. கீறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படாது.

மின்சார தொடர்புகளை பாதுகாப்பாக வைத்திருங்கள் :

மின்சார தொடர்புகள் எளிதில் ஈரப்பதமாகிவிடும். இதனால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு பைக்கில் உள்ள பல பாகங்கள் பாதிப்படையும். ஆகவே, பேட்டரி இருக்கும் இடம், சார்ஜ் பாய்ண்ட் மற்றும் வயரில் ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பதை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால், இந்த மின்சார தொடர்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க க்ரீஸ் அல்லது சீலண்டுகளை பயன்படுத்துங்கள்.

மழையில் நனையாதவாறு பைக்கை நிறுத்துங்கள் :

உங்கள் எலெக்ட்ரிக் பைக் அல்லது ஸ்கூட்டரை மழையில் நனையாதவாறு நிறுத்துங்கள். உங்கள் வீட்டில் பைக்கை பார்க் செய்ய இடமில்லை என்றால், தனியாக ஷெட் போல் அமைத்து அதில் பைக்கை பார்க் செய்யுங்கள் அல்லது பைக் கவர் வாங்கி மூடுங்கள். மழையில் நனையாமல் இருந்தால் உங்கள் பைக்கிற்கு ஏற்படும் பல பாதிப்புகளை குறைக்கலாம்.

சர்வீஸ் மற்றும் பராமரிப்பு :

உங்கள் எலெக்ட்ரிக் பைக்கை அடிக்கடி சர்வீஸ் செய்யுங்கள். அதுவும் குறிப்பாக பருவமழை காலத்திற்கு முன்பும் பின்பும் சர்வீஸ் செய்ய மறந்துவிடாதீர்கள். நீரினால் ஏதாவது பாதிப்பு இருந்தாலோ அல்லது வயர்களில் கனெக்ஷன் விடுபட்டிருந்தாலோ இதில் தெரிந்துவிடும்.

Chella

Next Post

Breaking news: சென்னையில் அமைச்சர் பொன்முடியின் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை…..! தலைமைச் செயலகத்திற்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு…….!

Mon Jul 17 , 2023
அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலின் 2ம் பாகத்தை மிக விரைவில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் […]

You May Like