fbpx

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்பட்டதால், சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடலில் என்ன பாதிப்பு என்பது …

எல்லைத்தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 19 பேரை மட்டும் இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் …

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் தொலைபேசி உரையாடல்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்தவர்களின் சொத்து கணக்கு என்ற ஆவணத் தொகுப்பை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். …

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவர் காங்கிரஸ் தலைமையிலான …

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் இருக்கக்கூடிய …

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கு அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து …

ரஷ்யா ஆக்ரமிப்பு பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .

யுத்தத்தின்போது உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள …

இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தி ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான படக்ஷான் பகுதியில் அமைந்துள்ள குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் …

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு முறை திராவிட முன்னேற்றக் கலகம் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மூன்று முறை அமைச்சராகவும் பதவி வைத்திருக்கிறார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞருடன் நிழல் போல இருந்து அவரைப் பார்த்துக் கொண்டவர் ஆற்காடு …