காய்கறிகள் என்பது எப்போதும் உடலுக்கு நன்மை வழங்குபவை தான் என்றாலும் கூட சில காய்கறிகளை அதிகமாக உண்பது உடலுக்கு சில பிரச்சினைகளை வழங்கும். எந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி தற்போது நான் தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிட்டு வருவதால், வாயு தொல்லை ஏற்படும் மேலும் வாயு அடைப்பு பிரச்சனை உண்டாகும். பட்டாணி அதிகமாக சாப்பிட்டால் செரிமான கோளாறு உண்டாவதுடன் பசி ஏற்படாது.
பீட்ரூட் அதிகமாக சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் ஆகவே குறைத்து சாப்பிட வேண்டும் என கூறப்படுகிறது. முருங்கைக்காய் அதிகமாக சாப்பிடுவதால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் தவிக்கும் நிலை ஏற்படும்.
சோள உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். மாங்காய் அதிகமாக சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரித்து, நீர் கடுப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.