விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி இருவருக்கு 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் எடுக்கின்ற பள்ளியில் படித்து வந்தார் இந்த நிலையில், பெற்ற மகளுக்கே தந்தை அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து தாயிடம் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் மகளின் வேண்டுகோளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வேறு வழி இல்லாமல் மகளை திருநெல்வேலி காப்பகத்தில் தாங்கி படிப்பதற்காக தாய் சேர்த்திருக்கிறார். இந்த நிலையில் விடுமுறை தினங்களில் வீட்டிற்கு வந்த மகளை அவருடைய தந்தை மறுபடியும் பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார்.
இதன் காரணமாக, வேதனை அடைந்த மாணவி, காப்பக நிர்வாகிகளிடம் கதறியபடி இது பற்றி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, காப்பக நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை, மற்றும் உடந்தையாக இருந்த தாய் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.