ஆகஸ்ட் 11, 2021 தேதியில் ஜி.எஸ்.ஆர் (பொதுவான கட்டாய விதிகள்) அறிவிக்கை 575 (இ) என்பது சாலை பாதுகாப்பில் மின்னணு கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக ஆபத்து மற்றும் அதிக போக்குவரத்து உள்ள வழித்தடங்களில் மின்னணு அமலாக்க சாதனங்களை நிறுவுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறது.
இந்த மின்னணு சாதனங்களில் அதிவேகத்தை கண்காணிக்கும் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள், உடலில் அணியும் கேமராக்கள், வாகன இருக்கை கேமராக்கள், எண் பலகை கண்டறியும் தானியங்கி கருவி, எடை இயந்திரங்கள் மற்றும் மாநில அரசால் குறிப்பிடப்பட்ட பிற தொழில்நுட்பங்கள் அடங்கும்.சாலை பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம், மின்னணு அமலாக்கம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019 ஐ மத்திய அரசு இயற்றியது.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளால் “மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பை” செயல்படுத்தவும், அதற்கான விதிகளை மத்திய அரசால் தயாரிக்கவும் திருத்தச் சட்டத்தின் பிரிவு 136 ஏ வழிவகுக்கிறது.