ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலை யூடியூபில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் 10 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் “காவாலா” பாடல் கடந்த மாதம் யூடியூபில் வெளியானது. இந்தப் பாடலும், தமன்னாவின் நடனமும் பெரும் வைரலாகியது.
இளைஞர்கள், குழந்தைகள் நடுத்தர வயதினர் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த பாடல் யூடியூபில் வெளியாகி நான்கு வாரங்கள் ஆன நிலையில், 10 கோடிக்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்த்து உள்ளனர். அதோடு 13 லட்சம் லைக்களையும் பெற்றுள்ளது இந்த பாடல். spotify தளத்தில் 17 மில்லியன் முறையும் google மியூசிக்கில் 10 மில்லியன் முறையும் காவாலா பாடல் கேட்கப்பட்டுள்ளதாக பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.