வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் (1-0), மற்றும் ஒருநாள் (2-1) போட்டியில் தொடரை வென்ற இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இளம் இந்திய அணி, நேற்று 2வது டி20 போட்டியில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 51(41) ரன்கள் எடுத்தார். மேலும் இஷான் கிஷான் 27, ஹர்திக் பாண்டியா 24, அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கு ரன் எடுத்து ஏமாற்றமே அளித்தனர். வேஸ்ட் இண்டீஸ் சார்பில் அகில் ஹூசைன், அல்சாரி ஜோசப், ரோமரியோ செபர்ட் தல 2விக்கெட்டுகளை எடுத்தனர்.
153 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் 2ரன்களுக்கு 2விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோல்வி நிலையில் இருந்த அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சேர்த்தார் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் நிக்கோலஸ் பூரான் 67, ரோமன் பவல் 21, ஷிம்ரன் ஹெட்மேயர் 22, ஹக்கில் ஹூசைன் 16 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா3 விக்கெட்டுகள், சாஹல் 2 விக்கெட்டுகள், முகேஷ் மற்றும் அர்ஷிதீப் தல ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என்று முன்னிலையில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.