fbpx

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, புதிய சாதனை படைத்த தமிழ்நாடு…..!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இதுவரையில், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறதே தவிர, ஒருபோதும் குறைந்தபாடில்லை.

ஒருவர் உயிரிழப்பது, இயற்கையான மரணமோ, அல்லது விபத்துகளின் மூலமாக மரணமோ, இறப்புகள் எப்படி இருந்தாலும், உயிரை இழந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் மூலமாக, இந்த உலகத்தில் மீண்டும் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். விபத்தில், மூளைச்சாவு அடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக உடலில் உள்ள கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்யும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2008 ஆம் வருடம், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அந்த வருடத்தின், செப்டம்பர் மாதத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சிறப்பு திட்டம் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் சென்ற 9 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல மடங்கு அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக, அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில், மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து, உடல் உறுப்பு தானம் பெற்று, இதுவரையில் 10,003 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து தமிழகம் சாதனை படைத்திருக்கிறது.

Next Post

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..! உடனே விண்ணப்பியுங்கள்……!

Mon Aug 7 , 2023
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால், பல்வேறு மாணவ, மாணவர்களும் பயனடைந்து வருகிறார்கள். அந்த விதத்தில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வின் மூலமாக, உதவி தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 18ஆம் தேதி வரையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

You May Like