இயக்குநர் பாரதிராஜா வீட்டில் அடுத்த அதிர்ச்சி.. உடன்பிறந்த சகோதரி காலமானார்..!!

Director Bharathiraja

இயக்குநர் பாரதிராஜாவின் உடன்பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் தேனியில் காலமானார்.


கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் பிரபலங்களின் மரண செய்தி அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகமான பிரபலங்கள் மாரடைப்பால் இறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் ஒருவர். மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.

கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில், அவரது தந்தை பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் உடன்பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் தேனியில் காலமானார். 95 வயதான இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தற்போது பாரதிராஜா உடல் நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருப்பதால், அவரால் அவரது சகோதரியில் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாது என உறவினர்களிடம் தெரிவித்துள்ளாரம்.

Read more: கூட்ட நெரிசல் வழக்கு!. ஆர்.சி.பி அதிகாரி உட்பட 4 பேர் கைது!. போலீசார் அதிரடி!.

Next Post

விவசாயிகளே.. உங்களுக்கு ரூ.2,000 வரப்போகுது..!! விண்ணப்பிக்காதவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Fri Jun 6 , 2025
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]
PM Kisan 2025

You May Like