Flash : ஷாக்.. இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

jewels nn

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. 


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.15,050-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.3.15 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

RUPA

Next Post

உங்கள் 30-களில் இவற்றை நீங்கள் உட்கொள்கிறீர்களா..? அப்படி எனில், 50 வயதை எட்டும்போது உங்கள் இதயத்தின் நிலை இப்படித்தான் இருக்கும்..!

Thu May 14 , 2026
30 வயது என்பது வாழ்க்கையின் மிக வேகமான மற்றும் உற்சாகமான காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில்தான் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் தங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெற்று, ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இருப்பினும், இந்தப் பந்தயத்தில், நாம் அனைவரும் ஒரு அமைதியான எதிரிக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை. அதுதான் இரத்த அழுத்தம் (BP). முப்பது ஆண்டுகளில் நமது இரத்த அழுத்தம் எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் செய்யும் […]
health issue

You May Like