fbpx

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்……! சமையல் எரிவாயு சிலிண்டர் விலை……!

பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி வருகிறது. ஆனாலும், மாதந்தோறும் இவற்றை விலை கொடுத்து வாங்க இயலாத அளவுக்கு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது.

ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒரு சிலிண்டரின் விலை 1182 ரூபாயாக தற்போது நிலவி வருகிறது. இலவச எரிவாயு திட்டத்தின் மூலமாக, சுமார் 6000 பழங்குடியின மக்களுக்கு சிலிண்டர் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருந்தாலும், 300 முதல் 400 வரையிலான பெண்கள் மட்டுமே இந்த சிலிண்டரை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

மற்ற ஏழ்மையான நிலையில், இருக்கும் மக்கள் சிலிண்டருக்கான தொகையை செலவு செய்தால், மாதம்தோறும் உணவு பொருளுக்கு, செலவு செய்ய பணம் இருக்காது எனவும், இதனால், விறகுகள் மூலமாக சமைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு சிலிண்டர் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Post

Local Holiday | தமிழ்நாட்டில் நாளை (ஆக.9) 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

Tue Aug 8 , 2023
தமிழ்நாட்டில் நாளை (ஆக.9) சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (ஆக.9) உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவை […]

You May Like