நலிந்த சூழலில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பண்டிட் தீனதயாள் உபாத்யாய் தேசிய நல நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி.
மத்திய விளையாட்டு அமைச்சகம், தற்போது நலிந்த சூழ்நிலையில் வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குதல், போட்டிகளின் போது காயமடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய் விளையாட்டு வீரர்களுக்கான தேசிய நல நிதி’ திட்டத்தை செயல்படுத்துகிறது
கடந்த 5 ஆண்டுகளில் மாநில வாரியாகவும், விளையாட்டுகள் வாரியாகவும் இந்த நிதி உதவியின் மூலம் எத்தனை விளையாட்டு வீரர்கள் பயனடைந்துள்ளனர் என்ற தகவல்கள் https://yas.nic.in என்ற இணையதளத்தில் உள்ளன. நலிவுற்ற சூழலில் வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும், விளையாட்டு வீரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 10 இலட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது.