மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் படத்தை வைத்து செய்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “முதலில் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் வைத்தவுடன் தக்கீஸ் பற்றிதான் படம் இருக்கும்; வடநாட்டில் இருக்கும் ஒரு கொள்ளை கும்பலை அடிப்படையாக வைத்துதான் இப்படம் இருக்கும் என்று சோசியல் மீடியாக்களில் பேசினார்கள். ஆனால், அதெல்லாம் படத்தில் இல்லவே இல்லை. சிம்புவுக்காக சந்திரா என்ற பெண்ணை தேடிப்போகும் கமல்ஹாசன், சந்திரா கிடைக்கவில்லை இந்திரா (திரிஷா) கிடைத்துவிட்டார் என்று சொல்லி அவரை அழைத்து வருகிறார்.
இந்தப் படம் கேங்ஸ்டர் படம் என்று சொல்கிறார்கள். ஆனால், கேங்ஸ்டர்களுக்கான எந்த சீனும் இப்படத்தில் இல்லை. மாமனாரின் இன்ப வெறி, பிட்டு படம் போல்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். படம் முடியும்போது விண்வெளி நாயகா என்று போடுகிறார்கள். விண்வெளிக்கும் கமல்ஹாசனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. அவர் என்ன கல்பனா சாவ்லாவா..? இல்லை சுனிதா வில்லியம்ஸா?. கர்நாடக பிரச்சனையில் We Stand With Kamal என்று சொன்னார்கள். ஆனால், படத்தில் நியாயப்படி பார்த்தால் We Stand With Simbu என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.