நாம் சாலையில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக பணம் கிடைத்திருக்கும். அப்படி கீழே கிடந்த பணத்த எடுத்து பயன்படுத்தும் போது நமக்குள் ஒருவித அச்சம், பாவம் வந்துவிடுமோ என்ற மன உளைச்சல் ஏற்படும். அந்த பணத்தைப் பயன்படுத்தலாமா? கூடாதா? என்று ஒருவித பயம் உணர்வு ஏற்படும். அப்படி சாலையில் பணம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்று ஆன்மீகத்தில் சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தில் பின்பற்றப்படும் ஐதீகம்படி பணம் லக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பணம் எதிர்பாராத விதமாக நமக்கு கீழே கிடந்து கிடைத்தால், அது பூமாதேவியின் வரமாக தான் பார்க்க வேண்டும். அதை எடுக்க எந்த தயக்கமும் காட்ட வேண்டியது இல்லை. சாலையில் கிடைக்கும் பணத்தை முடிந்த வரை உரியவரிடம் சேர்க்க முயற்சிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் என்ன செய்யலாம்? என்றும் சில குறிப்புகள் ஆன்மீக ரீதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
சாலையில் பணத்தை கண்டு எடுக்கும்போது, 2 விதமான அர்த்தங்கள் உள்ளன. நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் பெறுவது அல்லது நீங்கள் வீட்டிற்கு வரும்போது பணம் கிடைப்பது. வீட்டை விட்டு வெளியே வரும்போது பணம் கிடைத்தால், அதை அலுவலகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுத்துவிடுங்கள். அந்த பணத்தை நீங்கள் ஒருபோதும் செலவிடக்கூடாது.
பொதுவாக ஜோதிடத்தின்படி, யாராவது தெருவில் பணம் பார்த்தால், அது மிகவும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஜோதிடத்தில் பணம் லட்சுமி தேவியின் மற்றொரு வடிவமாக கருதப்படுகிறது. ஆகையால், பணம் கிடைக்கும் போது அன்னை லட்சுமி அவர்களை ஆசிர்வதிப்பாள் என்பதை அறிய வேண்டும். அவருடைய வாழ்க்கையில் இருந்த நிதிப் பிரச்சனைகள் மிக விரைவில் நீங்கும். மேலும் ஒரு புதிய வாழ்வு தொடங்க இருக்கிறது என்றும் பொருள். பெரிய வாய்ப்பு ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம்.
சாலையில் நாணயத்தை காண்பது, நீங்கள் சரியான வெற்றி பாதையில் செல்கிறீர்கள் என்பது அர்த்தம். நீங்கள் பணத்தை சாலையில் கண்டால், மனதில் அப்போது எதையாவது குறித்த அச்சம் கொண்டிருக்கிறீர்களோ அதை பறக்க விட்டு உங்கள் மனம் சொல்லும் பாதையில் உறுதியாய் செல்லுங்கள் என்று பொருள். நீங்கள் மனதில் சரியான பாதையை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று பொருள். அதை நோக்கி தளராமல் செல்லலாம் என்கிற சமிக்கையே சாலையில் கிடக்கும் ரூபாய் தாள்.
இவையெல்லாம், சிலருக்கு பலிக்கலாம், பலிக்காமலும் போகலாம். நல்ல உற்சாகமான சிந்தனைகளை வாழ்க்கையில் எடுத்துக் கொள்வது எப்போதும் நம்மை புத்துணர்வாக வைத்திருக்க செய்யும். எனவே, இனி சாலையில் பணமிருந்தால் எடுப்பதும் எடுக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு ஒரு அதிர்ஷட வாய்ப்பு இருக்கிறது என்பது ஆன்மீக ரீதியான நம்பிக்கை.
Read More : பெற்றோர்களே..!! உங்கள் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 தரும் தமிழ்நாடு அரசு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
குறிப்பு: (சாலையில் செல்லும்போது எதிர்பாராத விதமாக பெரிய தொகையில் பணம் கிடைத்தால், முடிந்தவரை உரியவரிடமோ அல்லது காவல்துறையினரிடமோ ஒப்படைப்பது நல்லது. இல்லையென்றால், காவல்துறை தன் கடமையை செய்யும்)