சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மாணவர்களுக்கு தற்போது ஆகஸ்ட் 14ஆம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்பட இருக்கிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும், மேலும் சுவையான சக்கரை பொங்கல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது