மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் பல புதிய கார்கள் வெளியிட தயாராக உள்ளது. சிறந்த டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக மைலேஜ் என பல அம்சங்களை உள்ளடக்கிய கார்களை விரைவில் சந்தையில் காணலாம். நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த புதிய கார்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
தற்போது வரை, சுசுகி நிறுவனம் முழுமையான விபரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், லீக் ஆன தகவல்களின்படி, Swift, Dzire மற்றும் ஒரு புதிய மின்சார எஸ்யூவி போன்ற மாடல்கள் முன்னேற்றப்பட்ட வடிவமைப்புடன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காம்பாக்ட் MPV & மைக்ரோ SUV: டாடா பஞ்ச் போன்ற கார்களுடன் போட்டியிட, குறைந்த விலையில் ஒரு புதிய காம்பாக்ட் MPV அல்லது SUV-ஐ அறிமுகப்படுத்த சுஸுகி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் ஹைப்ரிட் பதிப்பிலும் வரலாம். இந்தப் பிரிவில் வந்த இக்னிஸ் மற்றும் ரிட்ஸ் போன்ற கார்கள் வெற்றிபெறவில்லை என்றாலும், வேகன் ஆர் சிறப்பாக செயல்படுகிறது. இந்த புதிய கார் வேகன் ஆர்-க்கு புதிய தோற்றத்தையும் கொண்டிருக்கலாம்.
மாருதி சுஸுகி EWX: ஜப்பானில் நடந்த ஆட்டோ ஷோவில் சுஸுகி நிறுவனம் EWX என்ற சிறிய ஹேட்ச்பேக் காரை காட்சிப்படுத்தியது. இந்த கார் SUV போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கார் எப்போது சந்தைக்கு வரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு சிறிய EV போல தோற்றமளிக்கிறது.
மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் ஹைப்ரிட்: ஃபிராங்க்ஸ் கார் ஹைப்ரிட் பதிப்பில் வருகிறது. சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த கார் விரைவில் சந்தைக்கு வரக்கூடும். இது மைல்ட் ஹைப்ரிட் பதிப்பாக இருக்குமா அல்லது முழு ஹைப்ரிட் பதிப்பாக இருக்குமா என்பது இன்னும் தெரியவில்லை. இந்த கார் 1 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் எஞ்சினில் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய KIA Sonet போட்டியாளர்: KIA Sonet உடன் போட்டியிட புதிய 5 இருக்கைகள் கொண்ட SUV-யை மாருதி சுஸுகி கொண்டு வர உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாராவுக்குப் பிறகு மற்றொரு புதிய SUV-யை கொண்டு வர சுஸுகி திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஹைப்ரிட் பதிப்பில் வரக்கூடும். ஃபிராங்க்ஸ் ஹைப்ரிட் கார்களுக்குப் பிறகு இந்த கார் சந்தையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.