‘கொள்ளை போனது ஒரு பக்கம்.. கொள்ளையடிச்சது இன்னொரு பக்கம்’! வசமாக மாட்டிக் கொண்ட யூடியூபர் மதுமிதா!

Madhumitha 2026

வீட்டின் பூட்டை உடைத்து 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல பெண் யூடியூபர் மதுமிதா மீது, திருட்டு புகார் பதிவாகியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமாரின் மனைவி மதுமிதா. சமூக வலைதளங்களில் பல லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள இவர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கட்டுக்கட்டாக பணம், ஆடம்பர ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிட்டுப் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் குடியேறி வசித்து வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி தம்பதியினர் இருவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 118 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியிலிருந்த 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வலம்வந்த நபரை அடையாளம் கண்டு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) என்பவரை கைது செய்தனர். அவருடன் தொடர்புடைய மேலும் மூவர் பிடிபட்ட நிலையில், கொள்ளை போன நகைகளும் மீட்கப்பட்டன.

இச்சம்பவம் அடங்குவதற்குள், யூடியூபர் மதுமிதா மீதே நகை திருட்டுப் புகார் கிளம்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “கடந்த 2022ஆம் ஆண்டு பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணித்த தருணத்தில், எனக்கு தெரியாமல் எனது 5 சவரன் தங்க நகைகளை மதுமிதா திருடிச் சென்றுவிட்டார். இதுகுறித்து வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். இதனால், அப்போது புகார் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

கொள்ளை வழக்கில் பாதிக்கப்பட்டவராக இருந்த யூடியூபர் மதுமிதா மீதே, தற்போது நகை திருட்டு மற்றும் மிரட்டல் புகாரின் கீழ் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தவெக அமைச்சர்களுக்கு எதிராக பாய்கிறது மான நஷ்ட ஈடு வழக்கு! திமுகவுக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு!

Next Post

இதே வேலையா போச்சு.. உடனே ஆக்‌ஷன் எடுங்க..!! மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் விஜய்..!!

Mon Oct 5 , 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனிக்கவனம் செலுத்தி விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, கடந்த அக்டோபர் […]
cm vijay new

You May Like