எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம் ஏதர் எனர்ஜி (Ather Energy). இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஏதர் 450எஸ் (Ather 450s) என்ற புதிய டூவீலரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சம் ஆகும். ஏதர் எனர்ஜி நிறுவனமானது இந்திய மின்சார வாகன சந்தையில் பெரும் பகுதியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Ather 450s
இந்த ஸ்கூட்டரானது 450X ஸ்கூட்டரை போன்று அதே டிசைனை கொண்டிருக்கும். சில தனித்துவமான ஸ்டைலிங்குடன் வரும். புதிய Ather 450S-இன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 450X-ன் ஃபுல் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டிருக்கும். அதாவது புதிய 450S டூ வீலரானது நான்-டச் LCD டிஸ்ப்ளேவுடன் வரும். அதே போல 450X-ன் நேவிகேஷன் சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், 450S சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
3 kWh பேட்டரி பேக்குடன் வரும் Ather 450s, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் வரை செல்லும். இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 90 கிமீ வேகம் ஆகும். மேலும், இந்த ஸ்கூட்டரானது ஸ்லோ ஆக்ஸலரேஷன் மற்றும் அதிக வேகத்தை வழங்கும் என தெரிகிறது. Ather 450S அறிமுகத்தை தவிர 450Xஇன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.