சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இடம்பெயர்ந்தவர் தான் யோகிபாபு. முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார் யோகிபாபு.
இதற்கிடையே, நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் யோகிபாபு. முதல் படமே நயன்தாராவுடன் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து, ஹீரோவாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் நடித்தார் யோகிபாபு. இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க யோகிபாபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக யோகி பாபு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.