fbpx

சுதந்திர தின விழா வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு….! மிடுக்குடன் நடை போட்ட இந்திய வீரர்கள்….!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அமைந்திருக்கிறது வாகா எல்லை. இந்த பகுதியில் இருநாட்டு எல்லை பாதுகாப்பு வீரர்களும் சந்திக்கும் ஒரு பகுதியாக திகழ்கிறது.

இந்த எல்லை பகுதியில், இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசிய கொடியை மாலை சமயத்தில் இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமானதாக இருக்கும். இந்நிலையில் தான், நாட்டின் சுதந்திர தினமான இன்று இந்திய வீரர்கள் வீரத்துடன், நடைபோட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.

வாகா எல்லையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி, தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை கண்டு களித்தனர். வழக்கமான கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் முப்படையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பு அணிவகுப்பு நடத்தினார்கள். கடைசியாக நாட்டின் தேசியக்கொடி தரையிறக்கப்பட்டது.

Next Post

140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு...! நாசா கொடுத்த எச்சரிக்கை...!

Wed Aug 16 , 2023
கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஜூலை மாதத்தில் வெப்பம் பதிவாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 1880க்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் பதிவாகியுள்ளது. உலகெங்கிலும் இன்னும் யாரும் எதிர்பார்க்காத அளவிலான பேரழிவுகள் நிகழ வாய்ப்புள்ளது. உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கானவர்கள் உண்மையில் […]

You May Like