fbpx

வரும் 26-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்திற்கு மட்டும் தான்..

அரியலூர் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிறுவியர் மாமன்னர் ராஜேந்திர சோழன்.. தமிழ்நாட்டில் பல நகரங்கள், கிராமங்களை உருவாக்கிய ராஜேந்திர சோழன் இந்தியாவை தாண்டி அயல் நாடுகளிலும் சோழர்களின் ஆட்சியை நிலைநிறுத்தினார்.. ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்..

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த விழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா விமரிசையாக நடைபெற உள்ளது.. அதன்படி வரும் 26-ம் தேதி ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.. இந்நிலையில் வரும் 26-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அரியலூர் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Maha

Next Post

#Breaking: 24 மணி நேரத்தில் மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு தெரியுமா...?

Tue Jul 19 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 15,528 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 25 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,113 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

You May Like