சூப்பர் திட்டம்..! பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் திட்டம்…! உடனே இதை செய்யுங்க

money e1749025602177

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்,சென்னை மாவட்டத்தில் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம் அளிக்காதவர்கள் வைப்புத்தொகை பத்திரம், வங்கிக் கணக்கு விவரம் (தனி கணக்கு), 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்.


முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் பாதையை மாற்றிமைக்கும் திட்டமாகும். பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசின் நேரடி முதலீட்டின் மூலம் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இந்தத் திட்டத்திற்காக, ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை ஊக்குவித்தல் மற்றும் குறைந்தபட்சம் இடைநிலை வரையிலான கல்வியை உறுதி செய்வது. பெண் குழந்தைகளை 18 வயதுக்குப் பிறகே திருமணம் செய்ய ஊக்குவிப்பது. இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு நெறிமுறையைப் பின்பற்ற பெற்றோர்களை ஊக்குவிப்பது. பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி அதிகாரம் அளித்தல். பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை வலுப்படுத்துதல் ஆகும்.

வைப்புத்தொகை

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

Read More: இன்று உலக காற்று தினம் 2025!. காற்று மாசுபடுவதை எவ்வாறு தவிர்ப்பது?.

Vignesh

Next Post

காவ்யா மாறனுடன் திருமணமா?. கொஞ்சம் சில் பண்ணுங்க காய்ஸ்!. அனிருத் போட்ட ட்வீட்!.

Sun Jun 15 , 2025
“தனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி […]
kavya maran aniruth 11zon

You May Like