இனி ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்!. நாளைமுதல் புதிய UPI விதிகள் அமல்!. முழுவிவரம் இதோ!

upi NPCI

UPI இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியுள்ளது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து புதிய விதிகளை வெளியிடுகிறது.


அந்தவகையில், இந்தியாவில் உள்ள முக்கியமான டிஜிட்டல் பில்லிங் செயலிகள், PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றின் பயனர்கள், நாளை முதல் (ஜூன் 16) UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NPCI (National Payments Corporation of India) வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின் படி, பணம் அனுப்ப மற்றும் பெற எடுக்கும் நேரம் குறைக்கப்பட்டு, பரிவர்த்தனைகள் இன்னும் வேகமாக முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. அதேபோல யுபிஐ ஆப்களுக்கு சேவைகளை கொடுக்கும் பேங்குகளுக்கும் இந்த விதிகள் அமல் செய்யப்பட இருக்கிறது. அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது, அது இத்தனை நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் டைம் லிமிட்டை வைத்திருக்கிறது. இந்த லிமிட் மேலும் குறைக்கப்பட இருக்கிறது.யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும், அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரத்தில் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, யுபிஐ ஆப்களுக்கு பொருந்துகிறது.

முன்னதாக யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்புதல் (Debit) மற்றும் பெறுதல் (Credit) ஆகியவற்றுக்கு 30 நொடிகள் ரெஸ்பான்ஸ் டைம்மாக (Response Time) இருந்தது. அதாவது, பணத்தை நீங்கள் அனுப்பிய பிறகு அந்த பரிவர்த்தனை 30 நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு 15 நொடிகளாக குறைக்கப்படுகிறது.இதனால் இனிமேல் ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்.

ரென்பான்ஸ் டைம் மட்டுமல்லாமல், பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் (Transaction Status), பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் (Transaction Reversal) மற்றும் முகவரி சரிபார்ப்பு (Validate Address) ஆகியவற்றின் ரெஸ்பான்ஸ் டைம்மும் குறைக்கப்பட இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்த பிறகு பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளவதற்கு 30 வினாடிகள் ரென்பான்ஸ் டைம்மாக இருக்கிறது. இது ஜூலை 16ஆம் தேதிக்கு பிறகு 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது.

தற்போது பரிவர்த்தனையில் வெற்றிகரமாக முடியாதபட்சத்தில், அந்த தொகை ரிவர்ஸ் செய்ய 30 நொடிகளாக ரென்பான்ஸ் டைம் உள்ளது. இதுவும் 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் 15 வினாடிகளில் முடிக்கப்படுவதால், தொகையைும் அதிவேகமாக திரும்ப பெற்று கொள்ளலாம். இதனால் கையில் போனை வைத்துக்கொண்டு காத்திருக்க தேவையில்லை.

பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் (Payment Service Provider) ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் அக்கவுண்ட் விவரங்கள் அடிப்படையில் முகவரி சரிபார்ப்பு நடக்கிறது. இந்த நேரமும் 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு மேலும் அதிகவேகமாக யுபிஐ பரிவர்த்தனைகள் முடிக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Readmore: கவனம்.. செயல்படாத பான் நம்பரை யூஸ் பண்றீங்களா ? ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.10,000 அபராதம்..

KOKILA

Next Post

பாமக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை...! திமுக அரசு பதவி விலக வேண்டும்... கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்...!

Sun Jun 15 , 2025
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது உடற்கூறு ஆய்வில் […]
anbumani 2025

You May Like