பேசாமல் அமைதியாக இருப்பது புத்திசாலித்தனம்..!! – பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்

amit shah 065949537 16x9 0 1

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பயிற்சி முகாமில், கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில் நடந்த சிந்தூர் நிகழ்வைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதியின் சகோதரி” என குறிப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற அமித் ஷா, அரசியல் தலைவர்கள் எதையும் பேசும் போது பெரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“தவறுகள் நடக்கலாம். ஆனால் அது மீண்டும் நடக்கக் கூடாது. ஒருவர் எவ்வளவு அனுபவமுள்ளவராக இருந்தாலும், அவர் எப்போதும் ஒரு மாணவரைப் போலவே அடக்கம் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார். மேலும், “சில நேரங்களில் பேசாமல் அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்” எனவும், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருத்தையும் பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த கருத்துகள், கட்சி நிர்வாகத்திலுள்ள அனைத்து நிலை தலைவர்களுக்கும் ஒரு முக்கியச் செய்தியாக கருதப்படுகிறது. அரசியல் அடையாளத்தையும் கட்சி மதிப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையென்றே அமித் ஷாவின் இந்த எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

Read more: “அப்பா.. என்னை மன்னித்து விடுங்கள்.. நீங்கள் தான் தேசிய தலைவர்..!!” ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி.. முடிவுக்கு வரும் மோதல்..?

Next Post

பட்டாவில் ஒரு அளவு.. பத்திரத்தில் ஒரு அளவு இருக்கா..? சார் பதிவாளர்களுக்கு பறந்த உத்தரவு..! மக்கள் குழப்பத்திற்கு புல் ஸ்டாப்..

Sun Jun 15 , 2025
நில அளவு விவரங்களில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, பல்வேறு இடங்களில் பத்திரப்பதிவுகள் நிறைவேறாமல் திருப்பி அனுப்பப்படும் நிலை உருவாகி வருகிறது. இது பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் தேவையற்ற நேர தாமதத்தை உருவாக்கி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்கும் நோக்கத்தில், மாநில அரசால் சார் பதிவாளர்களுக்கு புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வீடு, மனை விற்பனைக்கான கிரய பத்திரங்களை, சம்பந்தப்பட்ட நிலத்திற்கான பட்டா மற்றும் நில அளவை வரைபடத்துடன் ஆன்லைன் […]
patta 2025

You May Like