தினமும் துணிகளை துவைப்பது, உலர்த்துவது, அயர்ன் செய்து அலமாரியில் வைப்பது ஒரு சலிப்பான வேலை தான். ஆனால், இந்த வேலையை செய்தாக வேண்டியிருக்கிறது. வேலைக்கு செல்வோரின் துணிகளை தினமும் துவைப்பது என்பது கடினமான வேலை. வார இறுதியில் தான் சேர்த்து துவைக்க வேண்டும். ஆனால், இப்போது பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷினை பயன்படுத்துகின்றனர். மெஷினிலிருந்து துணிகளை எடுக்கும்போது, அதில் எக்கச்சக்க சுருக்கங்களும் இருக்கும். அதை அயர்ன் செய்து போடுவதும் சலிப்பான வேலைதான்.
இதற்கெல்லாம் ஒரு தீர்வை தான் இந்தப் பதிவில் சொல்ல இருக்கிறோம். அதாவது, வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது துணிகளுடன் சேர்த்து 3 முதல் 4 கைப்பிடி அளவு ஐஸ் கட்டிகளை போட்டால் போதும். இப்படிச் செய்வதால் ட்ரையரில் இருந்து துணிகளை எடுக்கும்போது சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.
ஆம் உண்மையில், வாஷிங் மெஷினில் ஐஸ் கட்டிகளை போடுவதால், ட்ரையரின் வெப்பநிலையை அதிகரிக்கும். அப்போது ஐஸ் வேகமாக உருக ஆரம்பித்து, நீராவி உருவாகத் தொடங்குகிறது. இது துணிகளில் சுருக்கங்களை ஏற்படுத்தாது. வாஷில் மெஷினில் போடும்போது அதிக ஐஸ் கட்டி தேவையில்லை வெறும் 3 முதல் 4 துண்டுகள் சேர்த்தாலும் அதன் பலன் தெரியும்.
முதலில் உங்கள் துணிகளை சலவை இயந்திரத்தில் வைக்கவும். இப்போது டிடர்ஜென்ட் போன்றவற்றை மெஷினில் போட்டு கழுவுங்கள். இப்போது நீங்கள் இயந்திரத்தை இயக்கவும். துணிகள் துவைக்கப்பட்டதும், ட்ரையரில் போடும் போது மட்டும் ஐஸ் கட்டிகளை சேர்த்து ட்ரையரை 15 நிமிடம் வரை இயக்கவும். துணிகள் சுருள்கள் இல்லாமல் அதே நேரம் உலர்ந்து வெளியே வருமாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்க.
Read More : ஒருவர் எவ்வளவு நேரம் உட்கார்ந்து வேலை செய்யலாம்..? இளைஞர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!