fbpx

மாணவர்களே ரெடி…! தமிழகத்தில் வரும் 21-ம் தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை…!

வரும் 21-ம் தேதி முதல் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பில் காலியாக உள்ள 9820 இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பிராய்லர் கோழியில் இந்த ஊசி போடுவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் வழங்கப்படும்....! வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு...!

Thu Aug 17 , 2023
கறிக்கோழி வளர்ப்பில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில், 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வளர்ச்சிக்கு எதிராக இணையத்தில் பலர், ஹார்மோன் கலந்த பிராய்லர் கோழி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற தகவல்கள் பொய்யானது என நிரூபிக்க கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் மற்றும் கோழிப்பண்ணை […]

You May Like