fbpx

அடேங்கப்பா!… எவ்வளவு பெரிய தாடி!… நீளமான தாடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்!

ஹார்மோன் பிரச்சனையால் அவதியடைந்துவந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், நீளமான தாடி வளர்த்து கின்ன்ஸ் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வரும் பெண் எரின் ஹனிகட். இவருக்கு வயது 38. இவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்பட்டு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சி இவைகளால் அவதிப்பட்டு வந்தார். இதனால் எரின் ஹனிகட்டுக்கு 13 வயதாக இருக்கும் போதே முகத்தில் முடிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

ஷேவிங், வாக்சிங் மற்றும் முடியை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தனது முடியை தொடர்ந்து அகற்றிக்கொண்டே இருந்தார். ஆனால் முடி வளர்வதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்நிலையில் ஹார்மோன் பிரச்சனை காரணமாக எரின் தனது டீன் ஏஜ் வயது முழுவதும் இதைத் தொடர்ந்து செய்து வந்தாள். அப்பெண் தன் பார்வையை ஓரளவு இழந்த பிறகு, ஷேவிங் செய்வதில் சோர்வடைந்தாள். இதே நேரத்தில் கொரோனா காரணமாக அவர் தனது தாடியை வளர்க்க முடிவு செய்தார்.

இந்நிலையில், தற்போது எரினின் தாடி 30 செமீ அளவில் உள்ளது. இப்போது இவர் தான் உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணியாக கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முந்தைய சாதனை 25.5 செமீ அதாவது 10.04 அங்குலம் நீளமான தாடி 75 வயதான விவியன் வீலருக்கு இருந்தது தான் சாதனையாக இருந்தது. எரின் தற்போது ஏற்கனவே இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Kokila

Next Post

பெண்கள் பாதுகாப்புக்காக புதிய அப்டேட்!… இன்ஸ்டாகிராமில் இதற்கெல்லாம் தடை!

Thu Aug 17 , 2023
பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் புழங்கும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு அநாமதேயர்களிடமிருந்து இன்பாக்ஸ் வாயிலாக எழும் தொந்தரவுகளுக்கு முடிவு கட்ட இந்த புதிய அப்டேட் உதவும். இதன்படி இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்களது இன்பாக்ஸ் […]

You May Like