அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும்.
விபத்தின்போது கட்டிடத்தில் பெரிய அளவில் தீப்பிளம்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இந்த வெடிப்பு ராக்கெட்டிற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஜூன் 29 அன்று திட்டமிடப்பட்டிருந்த அடுத்த ஸ்டார்ஷிப் ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது, 2025இல் மனிதரை சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு அனுப்பும் லட்சியத்துடன் செயல்பட்டுவரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு ஒரு முக்கிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தற்போது, ஸ்பேஸ்எக்ஸ், கூட்டாட்சி கட்டுப்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து விபத்தின் காரணத்தை ஆராயும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் மதிப்பீடு செய்து, தேவையான மாற்றங்களை செய்த பிறகு தான் அடுத்த ஏவுதல் முயற்சி மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்ததாவது: “தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் தோல்விகள் எங்களை முடக்குவதில்லை. ஒவ்வொரு அனுபவமும், வெற்றிக்கு வழிகாட்டும் படிக்கட்டாகவே அமைகிறது. ஸ்டார்ஷிப் திட்டம் மனித இனம் பல கோள்களிலும் வாழ வழிவகுக்கும்.” என தெரிவித்தது.
Read more: வீட்டிலேயே எடையை குறைக்க தினமும் என்னென்ன செய்ய வேண்டும்..? – நிபுணர் விளக்கம்