தனுஷ் – சேகர் கம்முலா கூட்டணியில் உருவான படம் குபேரா.. ‘ஃபிடா’ படத்தின் மூலம் தனக்கென தனிப்பெயரை சம்பாதித்த சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் வெளியானது முதல் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே பதிவிட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்ததாகவும், தனுஷ், நாகார்ஜுனாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் தனுஷின் நடிப்பு படத்தை ஆஸ்கர் லெவலுக்கு எடுத்து சென்றுள்ளதாகவும், முதல் பாதிக்காகவே ஆஸ்கர் விருதுக்கு குபேரா படத்தை அனுப்பலாம் என்றும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இண்டெர்வெல் பிளாக் மற்றும் கடைசி 20 நிமிடங்கள் கூஸ் பம்ப் வரும் அளவுக்கு தாறுமாறாக இருப்பதாக மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் லைஃப் டைம் பர்ஃபாமன்ஸ் இது தான் என்றும், புதுப்பேட்டை ஆடுகளம் லிஸ்டில் தனுஷ் நடிப்புக்காக குபேரா இணைந்துவிட்டதாகவும் ரசிகரள் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.
மேலும் “ நடிப்பின் உச்சம், இசையின் உச்சம், இயக்கத்தின் உச்சம்.. இது தான் சினிமா” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
இதே போல் பலரும் தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் ஆகச்சிறந்த நடிகர் என்றும் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இயக்குனர் சேகர் கம்முலாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும் இந்தப் படத்திற்காக தனுஷ் ரூ. 30 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் அதிக சம்பளம் பெற்றுள்ளனர். இந்தப் படம் தமிழுடன் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகி உள்ளது.
படம் மீதான எதிர்பார்ப்பு, பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவை காரணமாக இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக இது மாறும் என்றும் கூறப்படுகிறது.
Read More : ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன?