மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களே..! இன்று வெளியாகும் பட்டியல்…!

tn school 2025

பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


நடைபெற்று முடிந்த மார்ச் 2025 , மேல்நிலை இரண்டாம் பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 23.06.2025 ( திங்கட் கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் , மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்திரா காந்தியின் இளைய மகன் முதல் விஜய் ரூபானி வரை!. விமான விபத்துகளில் உயிரிழந்த 7 பிரபல இந்திய பிரபலங்கள்!

Vignesh

Next Post

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: இனி தங்கத்தின் விலை உச்சத்தை எட்டும்..!! ஷாக் கொடுத்த நிபுணர்கள்..

Mon Jun 23 , 2025
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக களமிறங்கி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. இது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பங்குசந்தைகள் மற்றும் […]
Gold Rate today 6

You May Like