வங்கிகள் 3 முதல் 5 முறை கட்டணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை வழங்கி வரும் நிலையில், கடந்த மே 1ம் தேதி முதல் மெட்ரோ ஏடிஎம்களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பணம் எடுப்பது போன்ற நிதி பரிவர்த்தனைக்கு மட்டுமல்லாது, பேலன்ஸ் செக்கிங், மினி ஸ்டேட்மென்ட், பின் மாற்றம் போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கும் ஒட்டுமொத்தமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
யுபிஐ வந்துவிட்ட பிறகு பணப் புழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மத்திய அரசும் மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில், ஜூலை 1 முதல் ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஃபெடரல் வங்கிகளின் ஏடிஎம் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், ஐஎம்பிஎஸ், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளைப் பெறுவார்கள் . அதற்கு மேல், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும் . இருப்பினும், ஐசிஐசிஐ ஏடிஎம்களில் இருப்பு விசாரணை போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இலவசமாகவே இருக்கும் .
மெட்ரோ நகரங்களில் உள்ள ஐசிஐசிஐ அல்லாத ஏடிஎம்களில் , வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளைப் பெறுவார்கள் , அதே நேரத்தில் மெட்ரோ அல்லாத பகுதிகள் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன.
மெட்ரோ நகரங்களில் மாதம் 3 இலவச பரிவர்த்தனைகள். மற்ற இடங்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள். அதற்கு மேல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.21 + ஜிஎஸ்டி, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.8.50 + ஜிஎஸ்டி.
டிமாண்ட் டிராஃப்ட்/பே ஆர்டர்: ரூ.10,000 வரை ரூ.50. அதற்கு மேல் ரூ.1,000க்கு ரூ.5. குறைந்தபட்சம் ரூ.75, அதிகபட்சம் ரூ.15,000. சலுகைக் கட்டணம் (மூத்த குடிமக்கள், மாணவர்கள், கிராமப்புற கிளைகள்): ரூ.10,000 வரை ரூ.40, ரூ.10,000க்கு மேல் ரூ.50,000 வரை ரூ.60, ரூ.50,000க்கு மேல் ரூ.1,000க்கு ரூ.5. அதிகபட்சம் ரூ.15,000.
NEFT: ஆன்லைனில் இலவசம். கிளையில் ரூ.10,000 வரை ரூ.2.25, ரூ.10,001 – ரூ.1 லட்சம் வரை ரூ.4.75, ரூ.1 லட்சம் – ரூ.2 லட்சம் வரை ரூ.14.75, ரூ.2 லட்சம் – ரூ.10 லட்சம் வரை ரூ.24.75.
RTGS: ஆன்லைனில் இலவசம். கிளையில் ரூ.2 லட்சம் – ரூ.5 லட்சம் வரை ரூ.20, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.45.
ஆக்சிஸ் வங்கி (ஜூலை 1 முதல்): மெட்ரோ நகரங்களில் மாதம் 3 இலவச பரிவர்த்தனைகள். மற்ற இடங்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள். அதற்கு மேல் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.10-12.
ஃபெடரல் வங்கி (ஜூன் 1, 2025 முதல்): மற்ற வங்கி ஏடிஎம்களில், நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23, நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு ரூ.12. ஃபெடரல் வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லை. போதிய இருப்பு இல்லாததால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.25 வசூலிக்கப்படும்.
Readmore: திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம்.. மதுரை முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!