மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், நக்சலைட்டுகள் சிறிது ஓய்வெடுப்பார்கள் (ஏனெனில் அடர்ந்த காட்டுக்குள் பெருகும் ஆறுகள் மற்றும் ஓடைகள் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும்), ஆனால் இந்த முறை, மழைக்காலங்களில் அவர்களை தூங்க விடமாட்டோம், அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் நாட்டில் நக்சல்களை முழுமையாக ஒழிக்கும் இலக்கை அடைய நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். நக்சலைட் பாதையை எடுத்த தவறான வழிகாட்டப்பட்ட இளைஞர்களிடம் ஆயுதங்களைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்க விரும்புவதாக அவர் கூறினார்.
நக்சல்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வளர்ச்சிப் பாதையில் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவ்வாறு வருபவர்களை வரவேற்கிறோம். சத்தீஸ்கர் அரசும், மத்திய அரசும் நக்சல்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். நக்சல்களுக்கு மேலும், மேலும் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Readmore: உஷார்!. உங்கள் பாஸ்வேர்டை ஹேக்கர்கள் இப்படிதான் திருடுகிறார்கள்!. இந்த தவறை செய்யாதீர்கள்!