நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்றைய தினம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளி இந்த வெற்றிக்கு உலக நாடுகளே பாராட்டி வருகிறது.
இந்நிலையில் சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தார். மேலும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்தற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் உள்ள அவரது வீரமுத்துவேலின் தந்தை தொலைக்காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனதை நினைவு கூர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து நீங்க தமிழ் நாட்டுக்கு வரப்போ தகவல் சொல்லுங்க நான் வந்து பாக்குறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வீரமுத்துவேல் நீங்கள் தொலைபேசியில் நேரடியாக வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி, தமிழ்நாட்டில் தாங்கள் செய்து வரும் சேவைகள் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என தெரிவித்தார்.