fbpx

பெரும் சோகம்..! நேபாளத்தில் பேருந்து விபத்து…! 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு….

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து வியாழக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆறு இந்தியர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 19 பேர் காயமடைந்தனர்.

காத்மாண்டுவிலிருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் நேபாளி, மஹோத்தாரி மாவட்டத்தில் உள்ள லோஹர்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் மற்ற ஆறு பெரும் இந்தியர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பேருந்தின் இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் ஒரு உதவியாளரை காவலில் எடுத்து அவர்களிடம் விசாரித்து வருவதாகும் கூறப்படுகிறது. விபத்தின் போது காயமடைந்த அவர்களை ஜனக்பூரில் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு காவலில் எடுத்து விசாரிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் சோர்வு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதிவேகமாக பயணித்த பேருந்தை ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காயமடைந்த பயணிகள் தற்போது மக்வான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹெட்டாடாவில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நேபாள செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Kathir

Next Post

உலக நாடுகளை உலுக்கி பார்க்கும் வடகொரியா..!! அது என்ன உளவு செயற்கைக்கோள்..? கதறும் தென்கொரியா..!!

Thu Aug 24 , 2023
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. நேற்று கூட உளவு செயற்கைக்கோளை வடகொரியா ஏவிய நிலையில், சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்தது. 1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தான், அடிக்கடி […]

You May Like