மாஸ் காட்டிய திருப்பூர் தமிழன்ஸ்!. பிளே ஆப்- சுற்றுக்கு முன்னேற்றம்!. கோவை கிங்ஸ் ஏமாற்றம்!

tnpl ITT won 11zon

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய திருப்பூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், கோவை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து திணறியது. நடராஜன் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ஜிதேந்திர குமார் (6) அவுட்டானார். சிலம்பரசன் வீசிய 4வது ஓவரில் சச்சின் 2, சுரேஷ் ஒரு பவுண்டரி அடித்தனர். ‘பவர் பிளே’ ஓவர் (6) முடிவில் கோவை அணி 41/1 ரன் எடுத்திருந்தது.


சுரேஷ் 21 ரன் எடுத்து இசக்கிமுத்து பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இசக்கிமுத்து, குரு ராகவேந்திரனையும் (11) அவுட்டாக்கினார். கேப்டன் ஷாருக்கான் வந்த வேகத்தில், முதல் இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என அடித்தார். மறுபக்கம் மீண்டும் வந்த இசக்கிமுத்து, பாலசுப்ரமணியத்தை (24) வெளியேற்றினார். ஷாருக்கான் 9 பந்தில் 19 ரன் எடுத்து, சாய் கிஷோர் பந்தில் அவுட்டானார். இசக்கிமுத்து ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த விஷால் வைத்யாவை (13), சிலம்பரசன் திருப்பி அனுப்பினார். கோவை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டும் எடுத்தது. திருப்பூர் சார்பில் இசக்கிமுத்து 3, சாய் கிஷோர், நடராஜன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

138 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அமித் சாத்விக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் நிலைத்து நிற்காமல் மற்ற வீரரகள் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கோவை அணி சார்பில் புவனேஸ்வரன், திவாகர், சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதியில் திருப்பூர் அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் திருப்பூர் அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் கோவை அணி 6 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 5 தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

Readmore: IND vs ENG| முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி!. பயிற்சியாளர் கம்பீர் அதிரடி மாற்றம்?. வெளியான தகவல்!.

KOKILA

Next Post

Job: 14,500-க்கும் மேற்பட்ட மத்திய அரசு காலி பணியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Wed Jun 25 , 2025
SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]
ssc job

You May Like